Wisdom
நோய், வறுமை, வேலையின்மை மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் உண்டான வேதனைகளை தாங்க முடியாமல் மிகுந்த மனசோர்வுக்கு ஆளான ஒரு இளைஞர் துயரங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்காக மலை மேல் நடந்து சென்றார். வழியில் அவர் ஒரு பண்டிட்டை சந்தித்தார், அந்தப் பண்டிட் நினைத்தாலே கேட்ட வரம் தரும் ஷீரடி சாய்பாபாவை பற்றியும் பக்தர்கள் மீது சீரடி சாய்பாபா கொண்ட அன்பையும் அவர் செய்த அற்புத நிகழ்வுகளும் சீரடி மண்ணில் யார் கால் வைத்தால் அவர்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும் என்று ஷீரடி சாய் பாபா கூறிய அந்த வார்த்தைகள், காயப்பட்டிருந்த அவரது இதயத்திற்கு ஒரு இதமான மருந்தாக அமைந்தன. தன்னுடைய வாழ்க்கையை சீரடி சாய்பாபா பாதங்களின் முழுமையாக ஒப்புவித்து 2004 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியன்று புதிதாகப் பிறந்த நம்பிக்கையுடன் வந்தார். அந்த இளைஞன் வேறு யாருமல்ல இன்று துறவி ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அவர்கள்தான்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, அவர் மிகுந்த வைராக்கியத்துடன் ஷீரடி சாய்பாபாவை நாடத் தொடங்கினார்; பாபாவின் போதனைகள் வாசிப்பதிலும், ஷீரடி சாய் பாபா கோயிலில் பல மணி நேரம் காத்திருப்பதில் ஈடுபட்டார். ஏழு நீண்ட ஆண்டுகளுக்கு அவர் இதை மிக கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் செய்துவந்தார்; 2009-ஆம் ஆண்டு மார்ச் 07-ஆம் தேதி, அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து ஆழ்ந்த பக்தியின் மூலம் இறைவனை தெய்வ சக்தியை உணரும் நிலையில். ஆம், அவர் ஷீரடி சாய்பாபாவை நேருக்கு நேராக கண்டார்; மேலும், "நானே சாய் பாபா. உன் சுமைகளை தன் தோளில் தாங்கிக் கொள்வது உறுதியளித்து," என்று அவர் கூறுவதையும் கேட்டார். "மகனே, இவ்வுலகம் என்னுடைய அன்பையும் இரக்கத்தையும் குறித்து கேள்விப்பட்ட இருக்கிறதே தவிர, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அது வெளிப்படுவதை இதுவரை கண்டதில்லை. அனைவரையும் அன்பு செய்யவும், சர்வ வல்லமையுள்ள இறைவனை (சப்கா மாலிக் ஏக்) நம்பவும் போதித்தார். என்னை (நம்பிக்கை மற்றும் பொறுமை.) முழுமையாக நம்புங்கள், உங்கள் பிரார்த்தனை நிறைவேறும். பிரபஞ்சத்தில் காணக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் சாம்பலைப் போலவே நிலையற்றவை என்று கூறிய பாபா நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இவ்வுலகில் வாழ்ந்த போது என்னிடத்தில் இருந்த அதே சாதி-மத வேறுபாடின்றி அனைவரும் அன்பு செய்யவும், நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் சாம்பல் பூசினால் தீராத நோய்களை நீக்கும். துன்பப்படுபவர்கள் வலியைக் கண்டு, அவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் நீ எப்போதெல்லாம் உள்ளம் உருகுகிறாயோ, அப்போதெல்லாம் என் மக்களுக்காக நீ எதைக் கேட்டாலும், அது உனக்கு அருளப்படும்," என்று கூறினார்.
துறவி கருணாநிதி, மக்களின் தேவைகளுக்காக பிரார்த்தனை செய்து, ஷீரடி சாய் பாபாவின் அன்பைப் பகிர்ந்து கொண்டு அவர் மக்களுக்கு சேவையாற்றி வந்தார். நோய், வறுமை, வேலையின்மை மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவர்களுக்காகவும், எளிய மக்களுக்காகவும் அவர் தனது ஆன்மீக பணியை தெருக்களில் தொடங்கினார் ஆயினும், அவரைச் செவிமடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரளத் தொடங்கியது, ஆயிரக்கணக்கானோர் கூடும் பொது மேடைகளில் பேசும் நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டார். மக்களுக்கு அவர் ஆற்றிய அந்த ஆன்மீக பணிக்கு, பின்னர் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் (Shri Saibaba Sansthan Trust.) என்று பெயரிடப்பட்டது.
அவரது வாழ்க்கை மலர் படுக்கையாக அமைந்திருக்கவில்லை. அப்போது, அவரது அன்பு தந்தை, மற்றும் அவரது இரண்டு அண்ணன்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயிர் துறந்தார். மீண்டும், விமர்சனங்களின் சரமாரி அவரைத் தாக்கியது. இறைப்பணியில் வாயிலாக மக்களுக்கு சேவை செய்வதில் உள்ள அழுத்தம், முழுமையான நிதிச் சுமைகளையும் அவர் ஒருவரே தாங்கிக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியது; ஷீரடி சாய்பாபா போதனைகள் பரப்புவதற்கு அரசாங்கம், சமூகம் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் அதிகாரத்தில் வீற்றிருக்கும், இந்து விரோத சக்திகளிடமிருந்து பல அச்சுறுத்தல்கள், வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் உடல் ரீதியான மிரட்டல் மனிதர்களிடமிருந்து வந்த தாக்குதல்கள், அவரது இறைப்பணி தொடர்வதை நிறுத்தும்படி அவரை அச்சுறுத்தினார் கள். இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், தனது மன உறுதியும் தனது குடும்பத்தையும் காத்துக்கொள்வது அவருக்குப் பெரும் தனிப்பட்ட சவாலாக அமைந்தது. ஆயினும், இத்தகைய சூழ்நிலையில், ஷீரடி சாய் பாபா கருணாநிதி க்கு தெய்வீகத் தரிசனங்கள் கிடைத்தது. "இத்தகைய துன்பங்களையும் துயரமான அனுபவங்களையும் நீ கடந்து சென்றால் மட்டுமே, இதுபோன்ற பிரச்சினைகளால் அவதிப்படும் மக்களை பேர் இரக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்காகப் பரிந்துபேசி ஜெபிக்க உன்னால் இயலும்," என்று ஷீரடி சாய்பாபா அவருக்கு உணர்த்தினார்.
துறவி ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் தனது 25 ஆண்டுகால ஆன்மீக பயணம் முழுவதும், மக்கள் படும் துன்பங்கள் பற்றியும், அவர்களுக்காகச் ஷீரடி சாய்பாபா போதனைகள் பற்றியும் பேசிக்கொண்டு பிரசங்கிக்கும் போதெல்லாம் கண்ணீர் மல்குவார்; இது லட்சக்கணக்கான நொறுங்குண்ட இதயங்களுக்கு ஆறுதலையும் குணமாக்குதலையும் சென்றடைந்தது வருகிறது.
