Worship

ஆராதனைகள்

காகட ஆரத்தி (காலை), மத்தியான ஆரத்தி (மதியம்), தூப் ஆரத்தி (மாலை) மற்றும் சேஜ் ஆரத்தி (இரவு) ஷீரடி சாய் பாபாவிற்கு செய்யப்படும் ஆரத்திகளாகும்.


கோ பூஜை


கோ பூஜை என்பது பசுவை வழிபடும் ஒரு சடங்கு ஆகும். இது இந்து மதத்தில் முக்கியமானது அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன் 5:00 மணிக்கு நடைபெறும். கோ பூஜையில் கலந்து கொள்வதால், செல்வ செழிப்பு, கிரக தோஷங்கள் நீங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


காகட ஆரத்தி


காகட ஆரத்தி" என்பது ஷீரடி சாய் பாபாவிற்கு செய்யப்படும் காலை நேர ஆரத்தி ஆகும். இது பொதுவாக விடியற்காலை வேளையில், சூரிய உதயத்திற்கு முன் 5:30 மணிக்கு நடைபெறும். பக்தி பாடல்கள். பாடப்பட்டு, தீபாராதனை காட்டப்படும்.


மத்தியான ஆரத்தி


மத்தியான ஆரத்தி" என்பது ஷீரடி சாய் பாபாவிற்கு செய்யப்படும் மதிய நேரம் 11:30 மணி பூஜையாகும். இந்த ஆரத்தியில் சாய்பாபாவிற்கு பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை காட்டப்படும்.


தூப் ஆரத்தி


தூப் ஆரத்தி" என்பது ஷீரடி சாய் பாபாவிற்கு மாலையில் செய்யப்படும் ஒரு ஆரத்தி ஆகும். தூப் ஆரத்தி என்பது சாய்பாபாவிற்கு மாலை 6:00 மணிக்கு தூபத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஆரத்தி ஆகும். இந்த ஆரத்தி மூலம் பக்தர்கள் இதயங்களில் அன்பு, பக்தி பெருகும் என்பது நம்பிக்கை.


சேஜ் ஆரத்தி


சேஜ் ஆரத்தி" என்பது ஷீரடி சாய் பாபாவிற்கு இரவு நேரத்தில் செய்யப்படும் ஒரு சிறப்பு ஆரத்தி ஆகும். இது தினமும் இரவு 09:30 மணிக்கு நடத்தப்படுகிறது.


மதிய அன்னதானம்


அன்னதானம் மதிய நேரம் 12:00 மணிக்கு ஆயிரக்கணக்கான விருந்தினர்கள், சந்நியாசிகள், பிரம்மச்சாரிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
Close